உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா துவக்கம்

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா துவக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு வார துவக்க விழா நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று முதல் வரும் 20ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று துவக்க விழா நடந்தது. விழாவிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில், கூட்டுறவு கொடி ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. சரக துணைபதிவாளர்கள் சுகந்தலதா, குறிஞ்சி மணவாளன், விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கூட்டுறவு கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் கூட்டுறவு சார் பதிவாளர்கள் சாந்தி, சசிகலா, ரகு, சக்திவேல், மணிகண்டன், நிர்மல், செந்தில், பிரபா, இந்துமதி, தமிழ்செல்வி, மீனாட்சி, சவிதாராஜ், அபிரின்பானு மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், சங்க செயலாளர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து முடியனுார், குரால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் கூட்டுறவு கொடியேற்றி வைத்து மரக்கன்றுகள் நட்டார். அதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் அந்தந்த செயலாட்சியர்கள், சங்க செயலாளர்கள் கூட்டுறவு கொடியேற்றி மரக்கன்றுகள் நட்டனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் செல்வராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி