உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருட்டில் ஈடுபட்ட தம்பதி கைது

திருட்டில் ஈடுபட்ட தம்பதி கைது

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே திருட்டில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் அடுத்த வடகரைதாழனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சரவணன், 37; இவரது வீட்டில் கடந்த 2ம் தேதி, 10 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருடு போனது.அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.அதே ஊரை சேர்ந்த காமராஜ், 51; அவரது மனைவி ராஜேஸ்வரி, 48; ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இருவரும் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். மேலும் திருவெண்ணைநல்லுாரில் இரு இடங்களில் வீடு புகுந்து நகைகளை திருடியதும் கண்டறியப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 17 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ