உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி கோ பூஜை நடந்தது.சின்னசேலம், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் கோ பூஜை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மகா தீபாரதனையை முரளிதரன் சர்மா செய்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆர்ய வைசிய சமூகத்தினர் மற்றும் வாசவி, வனிதா கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.சின்னசேலம் விஜயபுரம் செல்வமுருகன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி வள்ளி தெய்வானை முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து வைத்து சிறப்பு பூஜை நடந்தது. அதேபோல் சின்னேசலம் வேதவல்லி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை