தீயணைப்பு வீரர்களுக்கு இதய மூச்சு காப்பு பயிற்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை பணியாளர்கள் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு உயர்தர இதய மூச்சுக் காப்பு வழங்கும் முறைகள் குறித்து செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது. பயிற்சியில் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட சேர்மன் பொன்னரசு பயிற்சி அளித்தார். அவசர நிலைகளில் உயிர் காப்பதற்கான உடனடி நடைமுறை திறன்கள், இதய நிறுத்தத்தை ஆரம்பத்திலேயே அடையாளம் காணுதல். உடனடி அவசர உதவி செயல்படுத்துதல், காற்றுப்பாதை மேலாண்மை முறைகள் மற்றும் தானியங்கி இதய அதிர்ச்சி கருவி பயன்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பொம்மைகள் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.