உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் தேர்வெழுத கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி, இந்திராநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் நித்யா,23; இவர் தலைவாசலில் உள்ள தனியார் கல்லுாரியில் தொலைதுார கல்வி மூலம் எம்.ஏ., படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி காலை 8:30 மணிக்கு, தேர்வெழுத கல்லுாரிக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அச்சமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகள் நித்யாவை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை