உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு தேர்வு எழுத சென்றபோது மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தலை சேர்ந்தவர் மணி மகள் புவனேஸ்வரி, 24; ஐ.டி.ஐ., படித்துள்ளார். கடந்த 31ம் தேதி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிக்கான தேர்வு எழுதுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட சென்ற புவனேஸ்வரி, மாலை வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். புவனேஸ்வரி கிடைக்காததால், மாயமான தனது மகளை கண்டுபிடித்து தர கோரி அவரது தாய் செல்வராணி போலீசில் புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை