கட்சிக்கொடி கம்பங்கள் இடித்து அகற்றம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சாலையை ஒட்டி, அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. கள்ளக்குறிச்சி, அண்ணா நகரில், பயணியர் நிழற்குடை சாலையை ஒட்டியவாறு அமைக்கப்பட்டிருந்தது.அதன் அருகே கட்சிக்கொடி கம்பங்கள், தள்ளு வண்டி கடைகளின் ஆக்கிரமிப்புகள் பெருகி, சாலை குறுகியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடி கம்பங்கள் நகராட்சி சார்பில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் நேற்று இடித்து அகற்றப்பட்டன. கலெக்டர் அறிவுறுத்தியபடி அங்கு சாலையை ஒட்டியவாறு அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை மாற்றி அருகாமையில் வேறிடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.