உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம் : சங்கராபுரத்தில், மும்மொழி கொள்கையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்கராபுரத்தில் தமிழ் அமைப்புகள் சார்பில், கடைவீதி மும்முனை சந்திப்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கை தமிழ்ச்சங்க தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். தமிழ் அமைப்புகளை சேர்ந்த புலவர் ஜெயராமன், ஆசிரியர்கள் லட்சுமிபதி, கமலநாதன், சாதிக், டாக்டர் நெடுஞ்செழியன், பேச்சாளர் திருவருள், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச்சங்க தலைவர் சவுந்தர், மதியழகன், சுதாகர், சக்திவேல்,ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை