உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலுார்: மணம்பூண்டியில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வீரா அகமுடையார் வெற்றிகழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் நீலகண்டன் தலைமை தாங்கினார். மத வேறுபாடு இன்றி சம உரிமை கிடைக்க வகை செய்யும் பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர். மாநில பொதுச் செயலாளர் மணி, பொருளாளர் வெங்கடேசன், திருக்கோவிலுார் நகர தலைவர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை