உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் போலீசார் நடத்திய சோதனையில் 800 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 10 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது.எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உத்தரவின்பேரில், கள்ளக்குறிச்சி உட்கோட்ட தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வண்டகப்பாடி ஓடை அருகே 4 பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 10 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். சாராய ஊறல் போட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை