உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு

டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தில், டி.ஐ.ஜி., உமா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கள்ளக்குறிச்சி உட்கோட்ட பகுதியில் நடந்த குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா. கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கு விபரங்கள், கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள், போக்சோ வழக்குகள் குறித்து டி.ஐ.ஜி. கேட்டறிந்தார். மேலும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக முடிக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து, டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஆய்வின்போது டி.எஸ்.பி., தங்கவேல், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !