உள்ளூர் செய்திகள்

டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு

திருக்கோவிலுார் : விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மித்தல் வீரபாண்டி கிராமத்தில் மதுவிலக்கு தொடர்பாக அதிரடி சோதனை நடத்தினார்.விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மித்தல் நேற்று மாலை வீரபாண்டி, ஆதிச்சனுார் சாலையில், ஏரிக்கரை மற்றும் புதர் மண்டிய பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதை தடுக்கும் விதமாக அதிரடி சோதனை நடத்தினார். இப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என்று அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்த டி.ஐ.ஜி., யாராவது சாராயம் காய்ச்சினால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார். இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை