மாணவர்களின் கல்வி அறிவுடன் பொது அறிவை வளர்ப்பதில் தினமலர் நாளிதழ் உதவுகிறது: ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் புகழாரம்
கள்ளக்குறிச்சி : தினமலர்' நாளிதழ் நடத்தும் நீட் மாதிரி தேர்வு, புதிதாக நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேர்வு குறித்த தெளிவையும், தைரியத்தையும் கொடுக்கும் என கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் நான்சி மாதுளா கூறினார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:மாணவர்களின் கல்வி அறிவுடன் பொது அறிவினை உயர்த்தும் வகையில் 'தினமலர் - பட்டம்' இதழ் வெளியிடப்பட்டு வருகிறது. இது போட்டி தேர்வுகளிலும், பொது அறிவிலும் மாணவர்களை மெருகேற்றி, வாழ்வில் வெற்றி பெற உதவுகிறது.'தினமலர்' நாளிதழுடன் இணைந்து கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் நீட் மாதிரி தேர்வு நடத்தியுள்ளோம். இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.தரமான கேள்விகளுடன் நடத்தப்பட்ட இந்த தேர்வில் நீட் தேர்விற்கான அரசின் விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.இது புதிதாக நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேர்வு குறித்த தெளிவையும், தைரியத்தையும் கொடுக்கும். இந்த நீட் மாதிரி தேர்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.எங்கள் பள்ளி நிர்வாகத்தின் முயற்சியால், இதுவரை 636 பேரை நீட் தேர்வில் தேர்ச்சி பெற வைத்து மருத்துவர்களாக்கியுள்ளோம். பள்ளியின் மிகவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலமாக ஒவ்வொரு மாணவரும் வெற்றி பெறுவதற்கான பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு ஐ.ஐ.டி., தேர்வில் 8 பேர் 90 சதவீதத்திற்கு மேலும், மெயின் தேர்வில் 12 பேரும் வெற்றியும் பெற்றுள்ளனர்.எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளிலும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து விதமான பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். இவ்வாறு பள்ளி முதல்வர் நான்சி மாதுளா கூறினார்.