மேலும் செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
28-Feb-2025
கள்ளக்குறிச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் இன்று ரத்து செய்யப்படுகிறது.கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடப்பது வழக்கம். இந்த முகாமில், 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் பாதிப்படைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்க டாக்டர்கள் ஒப்புதல் அளிப்பர்.இந்நிலையில் இன்று நடப்பதாக இருந்த முகாம், இந்த நிதி ஆண்டின் கணக்கு முடிக்கும் அலுவல் பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. வரும் 27, ம் தேதி முகாம் தொடர்ந்து நடத்தப்படும் என மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.
28-Feb-2025