உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத்திறனாளிகள் தின விழா

மாற்றுத்திறனாளிகள் தின விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த நாகலுார் சமூக நல மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடத்தப்பட்டது.நாகலுார் தனியார் கட்ட டத்தில் நடந்த நிகழ்ச்சியில் நுாற்றுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் இளைய ராஜா, சமூக நல மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை