உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்ட அளவிலான தடகள போட்டி; அரசு பள்ளி மாணவிகள் சாதனை

மாவட்ட அளவிலான தடகள போட்டி; அரசு பள்ளி மாணவிகள் சாதனை

கச்சிராயபாளையம்; குதிரைச்சந்தல் அரசு பள்ளி மாணவிகள், மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தில் அரசு மேல் நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிளான தடகள போட்டிகளில் பங்கேற்றனர். இதில் மாணவி அனு 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதலிடமும், மாணவி சாதனா 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 2 ம் இடம் பெற்றுள்ளார். இதே போல் 1,600 மீட்டர் தொடர் ஓட்டம், வட்டு எரிதல், நீச்சல் போன்ற பல்வேறு போட்டிகளில் மாணவிகள் பிரியதர்ஷனி, புன்னியஸ்ரீ, தர்ஷனி, வைஷ்ணவி, புனிதாஸ்ரீ, கோபிகா உட்பட 10 க்கும் மேற்பட்ட மாணவிகளும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் மணிமாறன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அறிவழகன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை