உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

சங்கராபுரத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

சங்கராபுரம்: சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.பள்ளி தாளாளர் துரை தாகப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், பள்ளி சேர்மன் மணிவண்ணன், பள்ளி நிறுவனர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக் பள்ளி) துரைராஜ் கலந்து கொண்டு சதுரங்க போட்டியை துவக்கிவைத்தார். இப் போட்டி 11,14,17 மற்றும் 19 வயதுடைய மாணவ, மாணவிகளுக்கு நான்கு பிரிவுகளாக நடந்தது. போட்டியில் உடற்கல்வி இயக்குனர்கள் பாலகிருஷ்ணன்,ஹரிகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஷம்சாத்பேகம், சாமிதுரை, பள்ளி இணை செயலாளர் டாக்டர் ரம்யா, முதல்வர் ஜெயந்தி மார்டின், மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி