மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான கோ- கோ போட்டி
30-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் சின்னசேலத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. குறுவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் 14, 17,19 வயது என மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தன. மாவட்டத்தில் உள்ள 5 குறுவட்டங்களில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி என மொத்தம் 15 அணிகள் பங்கேற்றன. இதுபோல் மாணவிகளுக்கும் நடத்தப்பட்டது. சின்னசேலம் சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டியினை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் துவக்கி வைத்தார். இதில் உடற்கல்வி இயக்குனர்கள் ஹரிஷரன், ராதாகிருஷ்ணன், செந்ததமிழ்செல்வன், வீரமுத்து, உடற்கல்வி ஆசிரியர்கள் லோகநாதன், பாலு, தினகரன், ஆதி, சாமிதுரை, ஜாக்குலின், சதிஷ், அமல்ராஜ், ரவி ஆகியோர் போட்டிகளை நடத்தினர். இதில் முதலிடம் பிடிக்கும் அணியினர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
30-Oct-2025