உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

திருக்கோவிலுாரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

திருக்கோவிலூர்; கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில், மாணவிகளுக்கான கபடி, கூடைப்பந்து, மேஜை பந்து உள்ளிட்ட போட்டிகள் திருக்கோவிலூர் ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் தாளாளர் முகில்வண்ணன் தலைமை தாங்கி விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஹேமலதா வரவேற்றார்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளின்கீழ் கபடி, மேஜை பந்து, கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மேற்பார்வையில், உடற்கல்வி இயக்குனர்கள் பாலாஜி, ஹரிஹரன், தணிகைவேல் மாணவர்களை வழிநடத்திச் சென்றனர். உடற்கல்வி ஆசிரியர்கள் பாலு, சங்கர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ