உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்ட மருந்து வணிகர் சங்கம் செயற்குழு கூட்டம்

மாவட்ட மருந்து வணிகர் சங்கம் செயற்குழு கூட்டம்

ரிஷிவந்தியம்; பகண்டைகூட்ரோட்டில் மாவட்ட மருந்து வணிகர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி, அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், தாலுகா தலைவர் துரை, பொருளாளர் குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மதியழகன் சிறப்புரையாற்றினார். சங்க 5வது பொதுக்குழு கூட்டம் டிசம்பர் மாதம் நடத்துதல், சங்க உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், சங்கத்தின் வளர்ச்சிக்காக கள்ளக்குறிச்சியில் இடம் வாங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன், மொத்த மருந்து வணிகர் பிரிவு தலைவர் செல்வராஜ், மக்கள தொடர்பு பிரிவு தலைவர் சேகர், தாலுகா தலைவர்கள் பழனிவேல், மோகன், நாச்சியப்பன், ஜெகன் நடராஜன், சரவணன் பங்கேற்றனர். செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ