உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்ட வருவாய் நிர்வாக கூட்டம்

மாவட்ட வருவாய் நிர்வாக கூட்டம்

கள்ளக்குறிச்சி : நிலுவை மனுக்கள் மீது விரைவில் தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர மாவட்ட வருவாய் நிர்வாகக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் நிலை, நீண்ட கால நிலுவை கோப்புகள், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பான மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் நிலுவை கோரிக்கை மனுக்களின் மீது விரைவில் தீர்வு காண வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த்குமார்சிங் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை