உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்ட பெண்கள் கிரிக்கெட்; கள்ளக்குறிச்சி அணி பங்கேற்பு

மாவட்ட பெண்கள் கிரிக்கெட்; கள்ளக்குறிச்சி அணி பங்கேற்பு

கள்ளக்குறிச்சி; தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள், 8 மண்டலங்களாக பிரித்து நடத்தப்படுகின்றன. கள்ளக்குறிச்சி, மதுரை, திருநெல்வேலி, வேலுார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிரிக்கெட் அணிகளுக்கான போட்டிகள் கிருஷ்ணகிரியில் உள்ள 5 கிரிக்கெட் மைதானங்களில் 5 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த 16 பேர் பங்கேற்றுள்ளனர்.இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைகள் தனித்தனியாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.அதில் சிறப்பாக விளையாடுபவர்களுக்கு தமிழ்நாடு மாநில அணியில் இடம்பெறும் வாய்ப்பு வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை