அரகண்டநல்லுாரில் தி.மு.க., கிரிக்கெட் போட்டி
திருக்கோவிலுார்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் அரகண்டநல்லுாரில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், அரகண்டநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி மற்றும் மாவட்டச் செயலாளர் கவுதம சிகாமணி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன. அரகண்டநல்லுாரைச் சேர்ந்த என்.எஸ்.எம்.கே., அணி கோப்பையை வென்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பு தலைமை தாங்கி, சுழற்கோப்பை மற்றும் ரூ. 12,000 ரொக்க பரிசு வழங்கினார். 2ம் இடம் பிடித்த ராயல் கிங்ஸ் அணிக்கு நகர இளைஞரணி அமைப்பாளர் தினகரன் ரூ.9,000 ரூபாய் ரொக்கம், 3ம் இடம் பிடித்த எஸ்.கே.டி., அணிக்கு நகர பொருளாளர் காமராஜ் ரூ.7,000 ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கினர். போட்டிகளில் பங்கே ற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தொழிலதிபர் பாலன், நகர துணை செயலாளர் சீனிவாசன், விக்னேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.