உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  தி.மு.க., கலந்துரையாடல்

 தி.மு.க., கலந்துரையாடல்

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., சார்பில் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தியாகதுருகத்தில், கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட முக்கியஸ்தர்களுடன் நடந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், நகர மன்ற தலைவர் சுப்புராயலு, பேரூராட்சி துணைச் சேர்மன் சங்கர் முன்னிலை வைத்தனர். மாநில மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார். வணிகர் சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு மற்றும் சங்க பொறுப்பாளர்கள் நகரின் வளர்ச்சி, நடைமுறைப்படுத்த வேண்டிய கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். ஒன்றிய சேர்மன் தாமோதரன், செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, பழனிவேல், அருட்செல்வன், அக்பர் உசேன், கோவிமுருகன், சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ