உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தி.மு.க.,வின் லோக்சபா தேர்தலுக்கான 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' பொதுக்கூட்டம் நடந்தது.சாமியார் மடம் பகுதியில் நடந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.நிகழ்ச்சியில் கவுதமசிகாமணி எம்.பி., மாநில மகளிரணி செயலாளர் அங்கையற்கண்ணி, மாநில விவசாய அணி துணை செயலாளர் சித்தார்த்தன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய, பேரூராட்சி சேர்மன்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.நகர செயலாளர், நகரமன்ற தலைவர் சுப்புராயலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை