மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தெற்கு ஒன்றிய, மற்றும் நகர தி.மு.க., சார்பில் கச்சேரி சாலையில் அம்பேத்கர் சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட நிர்வாகி பெருமாள் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் லோக்சபாவில் அம்பேத்கர் குறித்து தவறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும், பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உளுந்துார்பேட்டை
தாலுகா அலுவலகம் முன் மற்றும் பஸ் நிலையம் பகுதியில் நடந்த ஆர்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் வசந்தவேல், முருகன் முன்னிலை வகித்தனர். மணிகண்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா, நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு கண்டன உரையாற்றினர். நகர செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் செல்லையா, கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.