உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்

வாணாபுரம்; வாணாபுரத்தில் தி.மு.க., இளைஞரணி சார்பில், மத்திய பா.ஜ., அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.வாணாபுரத்தில் தி.மு.க., சார்பில் பா.ஜ., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பங்கேற்று, திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்தும், மத்திய பா.ஜ., அரசு தமிழகத்திற்கு அநீதி இழைப்பதாகவும் பேசினார். எம்.பி., மலையரசன், சட்டசபை தொகுதி பார்வையாளர் பெருநற்கிள்ளி ஆகியோர் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினர். கூட்டத்தில், இளம் பேச்சாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ