உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நாயனுார், தேவனுார் ஊராட்சிகளில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை

நாயனுார், தேவனுார் ஊராட்சிகளில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை

திருக்கோவிலுார்,;திருக்கோவிலுார் அடுத்த நாயனுார், தேவனுார் ஊராட்சிகளில் ஓர் அணியில் தமிழ்நாடு, புதிய உறுப்பினர் சேர்க்கையை மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி துவக்கி வைத்தார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை, திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட, தேவனுார், நாயனுார், வசந்தகிருஷ்ணாபுரம் ஊராட்சிகளில் நடந்தது. மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி, உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் பிரபு, ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர் அன்பு, திருக்கோவிலுார் நகராட்சி துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அய்யப்பன், ஒன்றிய நிர்வாகிகள் சக்தி, சிவம், பிரகாஷ், மணிவண்ணன், அந்தோணியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை