உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிஷிவந்தியம் தொகுதிக்கு 13ம் தேதி தே.மு.தி.க., பிரேமலதா வருகை

ரிஷிவந்தியம் தொகுதிக்கு 13ம் தேதி தே.மு.தி.க., பிரேமலதா வருகை

திருக்கோவிலுார்; ரிஷிவந்தியம் தொகுதிக்கு வருகை தரும் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவிற்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மணலுார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி பொறுப்பாளர் கருணாகரன் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது, கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக வரும் 13ம் தேதி ரிஷிவந்தியம் தொகுதியில் மக்களை சந்திக்க உள்ளார். கட்சி பொதுச்செயலாளருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ