உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  அரசம்பட்டில் நாய்கள் தொல்லை 2 நாட்களில் 12 பேர் பாதிப்பு

 அரசம்பட்டில் நாய்கள் தொல்லை 2 நாட்களில் 12 பேர் பாதிப்பு

சங்கராபுரம்: அரசம்பட்டு கிராமத்தில் கடந்த 2 நாட்களில் நாய் கடியால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 4 மாணவர்களை, அங்கு சுற்றித்திரிந்த நாய்கள் துரத்திச் சென்று கடித்தன. உடன், பாதிக்கப்பட்ட மாணவர்கள் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், நேற்று 23ம் தேதி மதியம் 1:00 மணியளவில் அரையாண்டு தேர்வு முடிந்து வீட்டிற்குச் சென்ற 8 மாணவ, மாணவிகளை நாய்கள் கடித்தன. கடந்த சில நாட்களா கவே அரசம்பட்டு கிராமத் தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்களை பிடிக்கக்கோரி புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்துடன் தெருவில் நடந்து செல் லும் நிலை நீடித்து வருகிறது. எனவே, அரசம்பட்டு கிராமத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி