உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தெரு நாயை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.சங்கராபுரம் அடுத்த ராஜபாண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்ராஜ். இவரது விவசாய கிணற்றில் நேற்று அவ்வழியாக திரிந்த தெரு நாய் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, கிணற்றில் இருந்து நாயை கயிற்றின் மூலம் உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ