மேலும் செய்திகள்
கொலை வழக்கில் தேடப்பட்ட தலைமறைவு நபர் கைது
22-Jul-2026
சங்கராபுரம்: சங்கராபுரம் லயன்ஸ் சங்கம் சார்பில் ஒரு ஜோடி கண்கள் தானமாக பெறப்பட்டது. சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மனைவி ஜெயலட்சுமி. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் வயது முப்பு காரணமாக இறந்தார். இவரது கண்களை சங்கராபுரம் லயன்ஸ் சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையான சங்கத்தினர் தானமாக பெற்று புதுச்சேரி மனக்குள வினாயகா மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். தாயின் கண்களை தானமாக வழங்கிய ராதாகிருஷ்ணன், ஜெகதீசன் ஆகியோருக்கு சங்கராபுரம் லயன்ஸ் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.
22-Jul-2026