மேலும் செய்திகள்
ரூ.1 கோடி வரதட்சணை கேட்ட கணவர் மீது புகார்
23-Jul-2025
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கணவன், மாமியார் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சின்னசேலம் காந்தி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் மகள் மகாலட்சுமி, 33; இருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மணி மகன் பாரத், 35; என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. கணவன் பாரத் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவி மகாலட்சுமியை கொடுமைபடுத்தி, வரதட்சணை வாங்கி வருமாறு திட்டியுள்ளார். இது குறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் கணவன் பாரத், மாமியார் செல்வி ஆகிய இருவர் மீதும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
23-Jul-2025