திரவுபதி அம்மன் கோவில் திருவிழா
உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டை அருகே, திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம், திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மஞ்சள் காப்பு அலங்காரம், மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா நடந்தது. தொடர்ந்து நாளை தீமிதி திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மேற்கொண்டுள்ளனர்.