உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி பாலியல் பலாத்காரம் போச்சோவில் டிரைவர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் போச்சோவில் டிரைவர் கைது

கள்ளக்குறிச்சி : எலவனாசூர்கோட்டை அருகே சிறுமியிடம் அத்துமீறிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தந்தையுடன் வசித்து வருகிறார். பொறையூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் கோவிந்தராஜ், 32; டிரைவர். சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மாலை சிறுமி தனது வீட்டில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த கோவிந்தராஜ், ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனது பைக்கில் அழைத்து சென்றார். சிறுமி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்கள் பல இடங்களில் தேடியபோது அதே பகுதியில் உள்ள வனப்பகுதியில் சிறுமி தனியாக நின்று கொண்டிருந்தார். சிறுமியிடம் விசாரித்தபோது, டிரைவர் கோவிந்தராஜ் சிறுமியிடம் அத்துமீறியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். பின்னர் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ வழக்கு பதிந்து கோவிந்தராஜை கைது செய்து செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ