மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர்கள் சசிராஜன், பிரகாஷ், சட்ட சேவை தன்னார்வலர் ஜெகதீசன் பங்கேற்று, போதைப்பொருட்கள் மற்றும் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். தொடர்ந்து, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், மாணவர்கள், சட்ட சேவை தன்னார்வலர் உள்ளடக்கி குழு அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் அசோக்குமார், கோவிந்தராஜ், ஆசிரியர்கள் பழனிவேல், முருகன், வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
16-Aug-2025