மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
13-Jun-2025
திருக்கோவிலுார் : சு.வாளவெட்டி, சிஷ்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.திருக்கோவிலுார் நான்கு முனை சந்திப்பிலிருந்து துவங்கிய ஊர்வலத்தை அருணாசலேஸ்வரர் கல்வி அறக்கட்டளை தலைவர் கணேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி செயலாளர் நேரு, பொருளாளர் மணி, துணைத்தலைவர் சாந்தகுமார் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். கல்லுாரி இணைச்செயலாளர் கண்ணன், இயக்குநர் மகாதேவன், கல்லுாரி முதல்வர் நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
13-Jun-2025