மேலும் செய்திகள்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
19-Aug-2025
கள்ளக்குறிச்சி : இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சார்பில் பைத்தந்துறை கிராமத்தில் நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு, ஊராட்சி செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். கல்லுாரி டீன் அசோக் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சீதாபாமா வரவேற்றார். போதை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக மாணவர்கள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் கயல்விழி, ஹேமவர்தினி, விமலா ஜென்சி, ஆய்வக உதவியாளர் வீரமுத்து, வார்டு உறுப்பினர்கள் உட்பட கல்லுாரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கணினி பயன்பாட்டியியல் துறை தலைவர் தங்கவேலு நன்றி கூறினார்.
19-Aug-2025