மேலும் செய்திகள்
உதவி இயக்குநர் பொறுப்பேற்பு
09-Oct-2026
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வட்டார வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கு மின்னணு வர்த்தகம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. எல்ராம்பட்டு கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த முகாமிற்கு, வேளாண் உதவி இயக்குநர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வித்யா முன்னிலை வகித்தார். வேளாண் உதவி இயக்குநர் கோவிந்தராஜ் மின்னணு வர்த்தகம் தொடர்பான நுணுக்கங்களை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார். உதவி வேளாண் அலுவலர் ஜெயபிரகாஷ், ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலை, உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரகலாதன் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
09-Oct-2026