உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தனியார் டிராக்டர் நிறுவனத்தை கண்டித்து இ.கம்யூ., போராட்டம்

தனியார் டிராக்டர் நிறுவனத்தை கண்டித்து இ.கம்யூ., போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை முன்பு திருக்கோவிலுார் ஒன்றியக்குழு இ.கம்யூ., சார்பில் நடந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செந்தில், மாவட்ட துணை செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ராமசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் டிராக்டர் நிறுவனத்தின் முறைகேடுகளை கண்டித்தும், அதன் மேலாளர் மற்றும் கடன் வசூலிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், தேவேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் அஞ்சாமணி, மாவட்ட நிர்வாகக்குழு விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை