உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உயர்கல்விக்கு கல்வி கடன் முகாம்

உயர்கல்விக்கு கல்வி கடன் முகாம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில், மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு கல்வி கடன் முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசியதாவது; மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயர்கல்வியை மேம்படுத்த கல்லுாரி, பஸ் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்டவை செலுத்த போதிய வருமானம் இல்லாத மாணவர்களின் நிலையை போக்குவதற்கு கல்வி கடன் வழங்கப்படுகிறது. பிரதமரின் வித்யாலஷ்மி என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, வங்கிகளில் இருந்து கல்வி கடன் பெற்று கொள்ளலாம். முகாமில் அலுவலர்கள் கூறும் வழிமுறைகளின்படி மாணவர்கள் உரிய ஆவணங்களை கொண்டு கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ரூ.4 லட்சம் வரை எவ்வித அடமானமும் இன்றி கல்வி கடன் வழங்கப்படுகிறது. எனவே அனைத்து மாணவர்களுக்கும் இந்த திட்டத்தினை பயன்படுத்தி கல்வி கற்று நல்ல வேலைவாய்ப்பை பெற்று முன்னேற வேண்டும் என்றார். தொடர்ந்து நடந்த நிறைந்தது மனம் நிகழ்ச்சியில், கல்வி கடன் முகாம் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்து பேசினர். முகாமில் மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், மாவட்ட முன்வோடி வங்கி மேலாளர் ரஞ்சித், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை