உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உயர்கல்விக்கு வங்கியில் கல்வி கடன் : கலெக்டர் தகவல்

உயர்கல்விக்கு வங்கியில் கல்வி கடன் : கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி,; மாணவர்கள் கல்லுாரி படிப்பை தொடர்வதற்கு பி.எம். வித்யா லட்சுமி போர்டல் மூலம் விண்ணப்பித்து வங்கியில் கல்வி கடன் பெற்று பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்விக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு நிதி தடையாக இருக்க கூடாது. பி.எம்., வித்யா லட்சுமி போர்டல் மூலம் கல்வி கடன் பெற்று கொள்ளலாம். மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வங்கிகளில் சமர்ப்பித்து தங்களுக்கான கல்வி கடனை பெற முடியும். உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கவும் கடன் வழங்கப்படும். மாணவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விதமான மேற்படிப்புக்கும் கடன் பெறலாம். கல்வி கடனை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிககள், கிராம வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிககள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறலாம். தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளைக்கு ஆன்லைன் https://pmvidyalaxmi.co.in/ மூலம் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம். கல்வி கடன் பெற கல்லுாரி சேர்க்கைக்கான சான்று, கல்வி கட்டண விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட தேவையான அனைத்து ஆணவங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ரூ. 4 லட்சம் வரை கல்வி கடனுக்கு எவ்வித அடமானம், ஜாமீன் தேவையில்லை. ரூ.4 முதல் 7.5 லட்சம் கடனுக்கு மூன்றாம் நபர் ஒருவர் ஜாமீன்தாராக இருக்க வேண்டும். ரூ.7.5 லட்சத்திற்கு மேல் கடனுக்கு அசையும் அல்லது அசையா சொத்துகள் அடமானமாக வைக்க வேண்டும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை