உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போக்சோவில் முதியவர் கைது

போக்சோவில் முதியவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்ய முயன்ற முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று முன்தினம் மதியம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கலியன், 76; என்ற முதியவர், சிறுமியை இழுத்து சென்று தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.இதைப்பார்த்த பாட்டி சிறுமியை மீட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து முதியவர் கலியனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !