உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாகனம் மோதி மூதாட்டி பலி

வாகனம் மோதி மூதாட்டி பலி

கள்ளக்குறிச்சி: அரியபெருமானுாரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுாரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி 60 வயது மூதாட்டி நேற்று காலை 5:30 மணியளவில் நடந்து சென்றார். அப்போது, சங்கராபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதி நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து இறந்த மூதாட்டி யார், விபத்து ஏற்படுத்தியது எந்த வாகனம் என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி