உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் நாளை குறை கேட்பு முகாம் நடக்க உள்ளதாக, மின் வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்தார். அவரது செய்திக்குறிப்பு: கோட்டத்தில், அனைத்து பிரிவு அலுவலக எல்லைக்குட்பட்ட நுகர்வோர் மற்றும் பொது மக்கள் புகார்களை நாளை 5ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, சங்கராபுரம் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் குறைகேட்பு முகாமில் அளிக்கலாம். மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு, விவரங்கள் தெரிவிக்கப்படும். பொது மக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை