மேலும் செய்திகள்
பூச்சி மருந்து குடித்தவர் சாவு
22-Apr-2025
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் ஏரி நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை, கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்தார்.கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணையில் இருந்து கச்சிராயபாளையம் ஏரிக்கு நீர் செல்லும் கால்வாய் ஓரங்களில் தனிநபர் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கச்சிராயபாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யாவு என்பவர் கடந்த, 2024 ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதே ஆண்டு, ஏப்ரல் முதல் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். ஆனால் அவற்றை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அய்யாவு மீண்டும் ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஏரி பாசன கால்வாயை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்ற நீதிபதி மைதிலி, கச்சிராயபாளையம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் துவக்கம் முதல் ஏரி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், தாசில்தார் பாலகுரு, டி. எஸ். பி., தேவராஜ், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.
22-Apr-2025