முதியவர்கள் கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த மேலப்பழங்கூர் கிராமத்தில், அறம் பழகு அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா மற்றும் முதியவர்கள் கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருக்குறள் திருவிழாவில், மேலப்பழங்கூர், நுாரோலை, பகண்டைகூட்ரோடு, சித்தால் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் பங்கேற்று திருக்குறள் ஒப்புவித்தனர். 4 பிரிவுகளாக போட்டி நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 பேர் வீதம், நான்கு பிரிவுகளிலும் அதிக எண்ணிக்கையிலான திருக்குறள் ஒப்புவித்தவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மேலப்பழங்கூரில் வசிக்கும் 70 வயது மேற்பட்ட முதியவர்களுக்கு சால்வை அணிவித்து, ஊன்றுகோல் வழங்கி கவுரவிக்கப்பட்டது.