உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிளை நுாலகத்தின் செயல்பாடு குறித்த விளக்கப் பயிற்சி

கிளை நுாலகத்தின் செயல்பாடு குறித்த விளக்கப் பயிற்சி

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் சார்பில் கிளை நுாலகத்தில் செயல்பாடுகள் குறித்த விளக்கப் பயிற்சி நடந்தது. மணலுார்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள் சார்பில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மணலுார்பேட்டை கிளை நுாலகத்தில் திட்ட அலுவலர் மோகனா தலைமையில் மாணவியர்கள் பங்கேற்ற நுாலகமும் அதன் பயன்களும் குறித்த நேரடி விளக்கப் பயிற்சியை நுாலகர் அன்பழகன் அளித்தார். மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன், வளர்ந்து வரும் சமுதாயத்தில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவியர்களின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார். தருண், புஷ்பா, சரஸ், ஆரோக்கிய ரூபி, செல்லதுரை, வேலன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நுாலகப் பணியாளர் பாஸ்கரன், ஆசிரியர் வர்ஷா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை