மேலும் செய்திகள்
கண் சிகிச்சை முகாம் 227 பேர் பங்கேற்பு
10-Mar-2025
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அரிமா சங்கம் சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 162 பேர் பயனடைந்தனர். மணலுார்பேட்டை அரிமா சங்கம், புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனை இணைந்து மணலுார்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. அரிமா சங்கத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.முன்னாள் தலைவர்கள் செந்தில்குமார், ராஜதுரை, சம்பத், பொருளாளர் முனியன் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் அம்முரவிச்சந்திரன் முகாமை துவக்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற 162 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 72 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.ஏற்பாடுகளை சங்க ஒருங்கிணைப்பாளர் முருகன் செய்திருந்தார்.
10-Mar-2025