உள்ளூர் செய்திகள்

கண் சிகிச்சை முகாம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தாலுகா வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர் நலச் சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் மறைந்த திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பாடகி ஜானகி, ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. பின், கண் சிகிச்சை முகாம் நடந்தது. சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். முகாமில் 80க்கும் மேற்பட்டோருக்கு வாசன் ஐ கேர் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து புகைப்படம் எடிட் செய்வது, திருமண ஆல்பம் மேக்கிங், வீடியோ எடிட்டிங் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை